இலங்கை மின்சார சபையின் சொத்துக்களை 06 புதிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளருக்கு எழுத்து மூலமாக இது தொடர்பான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்திற்கமைய அதனை 06 நிறுவனங்களின் கீழ் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முறையாக உரிய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
