தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

 


தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

ஹட்டன், நாவலப்பிட்டி, நுவரெலியா, பதுளை உள்ளிட்ட நகரங்களுக்கு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் டி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.

பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தூர சேவைகளுக்கான பஸ் நிலையத்திலும் பிரதான நகரங்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

About ஈழ தீபம்