சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்வனவு விலைகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த நெல் வகைகளை கொள்வனவு செய்வதற்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச விலைகளை அதிகரிப்பது பொருத்தமானதென அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாட்டரிசி நெல் கொள்வனவு விலையை தொடர்ந்தும் 120 ரூபாவாக பேணுவதற்கும்
சம்பா நெல் கொள்வனவு விலையை 125 ரூபாவிலிருந்து 130 ரூபாவாகவும் கீரிசம்பா நெல் கொள்வனவு விலையை 132 ரூபாவிலிருந்து 140 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
