காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்



  மன்னம்பிட்டி - கொட்டலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை - தளுகான பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிப்பர் சாரதியான குறித்த நபர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி செய்த முறைபாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக 3 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வெலிகேபொல ஹந்தகிரிகொட பகுதியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கழுத்து நெறிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

About ஈழ தீபம்