தென்னிந்திய கலைஞர்கள்! இலங்கையில் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தென்னிந்திய கலைஞர்கள்! இலங்கையில்

 




பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.



 மேலும் குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று  (08) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான முறையில்  வரவேற்கப்படுள்ளார் 


யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில்இன்று  (09) ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது  குறிப்பிடத்தக்கது .





குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு திகதி  (06) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார் 


இதையடுத்து பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் திகதி (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.










இதேவேளை இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

About UPDATE