ஹிரோசிமா நகரின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி முதலாவது அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாக்குதல் காரணமாக இந்த நகரம் 90 வீதம் அழிவுக்குட்பட்டதுடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரேநேரத்தில் உயிரிழந்தனர்.
அவ்வருட நிறைவில் மரணித்தவர்களின் எண்ணக்கை 1,40,000 ஆக அதிகரித்தது. இந்த அனர்த்தம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கு அஞ்சலியும் செலுத்தினார்.
அப்பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் கட்டிடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.