7 வயது மகனை கொடூரக் கொலை செய்த தாய்!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

7 வயது மகனை கொடூரக் கொலை செய்த தாய்!!!

பிரித்தானியா - ஸ்ரோப்ஷைர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து வாழும் நிலையில் தனது 7 வயது மகனை கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
தனது மகனை கொலை செய்வதற்கு முன்னர் தனது முன்னாள் கணவருக்கு எழுதிய கடிதத்தில் “நீ சாகும் வரை இந்த வலியை அனுபவிப்பாய் என்று நம்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு பிறகு பொலிஸ் விசாரணையின் போது குறித்த பெண்ணின் தற்போதைய கணவர், தனது மனைவி தன்னைத்தானே தாக்கிக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களுடன் குளியலறையில் கிடந்ததாகவும், தன்னைக்  கண்டதும் ” நான் அவனைக் கொன்று விட்டேன், முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்று விட்டேன் அவன் இப்படிக் கஷ்டப்படுவதை என்னால் பார்க்கமுடியவில்லை” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்ணின் வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது பெண்ணின் அறையில் கிடந்த கடிதங்களில் “ஆர்ச்சி செத்தாலும் கூட பரவாயில்லை ஆனால் அவனை அவனது தந்தையுடன் போக விட மாட்டேன்”என்று எழுதி வைத்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை, 
“எனது மகனின் இழப்பு வாழ்நாள் முழுவதும் எனக்கு ஒரு பேரிழப்பாகவே இருக்கும் சொந்த மகனை அடக்கம் செய்யும் துயரம் யாருக்கும் வரக்கூடாது” என்று துயரம் பொங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பத்து பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்கிய நடுவர்கள் குழு ஒன்று இரண்டு வார விசாரணைக்கு பின்பு குறித்த பெண் குற்றவாளி என்று தீர்மானித்து தீர்ப்பை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

About Unknown