4 வயது மகளை பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்திய தந்தை!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

4 வயது மகளை பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்திய தந்தை!!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது 4 வயது மகளை பாலியல் வியாபாரம் செய்யும் கும்பலிடம் விற்க முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 30 வயதான  ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலிக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
இந் நிலையில் இவர் தனது மகளை மனைவியிடம் இருந்து கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். 
தகவல் அறிந்த பொலிஸார் குழந்தையின் தந்தையை கைது செய்து, ஹாரீஸ் கவுண்டி நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதி பதிகள் குழு குற்றவாளியான குழந்தையின் தந்தைக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 30 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் 75 வயது வரை குற்றவாளிக்கு பிணை வழங்க கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

About Unknown