சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து ; 32 பேர் பலி

Related imageசிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
 சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. 
போர் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில், சிரியாவில் இடம்பெற்றுவரும் இராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும் இதுவரை 1300 பேர்  உயிரழந்துள்ளனர்.
இந்த போரில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆனாலும் ரஷ்யா அவ்வப்போது வான்வெளி தாக்குதல் மேற்கொள்கிறது. 
இந்த நிலையில் சிரியா அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்துகுள்ளாகியுள்ளது. சிரியாவின் லடாகியாவிலுள்ள ரஷ்ய விமான தளத்திற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது. 
சிரியாவில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 32 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேரில் 6 பேர் விமான சிப்பந்திகள் ஆவர்.

About Unknown