ரயில் சேவை இடைநிறுத்தம்!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ரயில் சேவை இடைநிறுத்தம்!!!

Image result for sri lanka railwayஎதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் மார்ச் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வீதி மூடப்பட்டுள்ளமையினால் தலைமன்னார் மற்றும் மதவாச்சிக்கிடையில் விசேட பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையான ரயில்  மார்க்கத்தில் இருக்கின்ற பாலத்தின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயிவே திணைக்களம் அறிவித்துள்ளது.

About Unknown