அதைப் பற்றி நாம் மட்டும்தான் பேசுகிறோம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அதைப் பற்றி நாம் மட்டும்தான் பேசுகிறோம்

Image result for ranil“குறிப்பிட்ட சில கட்சிகள் ஏனையோர் மீது சேறு பூசவே அரசியல் மேடைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், மக்களினதும் நாட்டினதும் அபிவிருத்தியைப் பற்றிப் பேசும் ஒரேயொரு கட்சி ஐ.தே.க.வே!”
    இவ்வாறு, இரத்தினபுரியில் நேற்று (2) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“நம்மை விமர்சிப்பவர்களிடம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான திட்டம் எதுவும் இல்லை. அதனால்தான் அவர்கள் மற்றவர்களுடைய குறைகளைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள்.
“தற்போதைய அரசு நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமானதாக ஆக்கவேண்டும், ஆக்கும்! மத்திய அரசாக இருந்தாலும் உள்ளூராட்சி அரசாக இருந்தாலும் தங்களுக்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் சலுகைகளையும் நன்மைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


About Unknown