ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி நேற்று காலமானார்!!! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி நேற்று காலமானார்!!!

Image result for உனா மக்கோலிஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய வந்த உனா மக்கோலி நேற்று உயிரிழந்துள்ளார் என கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையிலேயே 54 வயதான உனா மக்கோலி உயிரிழந்துள்ளார். 
 ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய உனா மக்கோலி  இலங்கையில் ஐக்கிய நாடுகளின் 21 அமைப்புகளுக்கு தலைமைப் பதவியை வகித்துள்ளார். 
அயர்லாந்தைச் சேர்ந்த உனா மக்கோலி இரண்டு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Unknown