இந்தியாவில் இளமாணி மற்றும் முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொள்ள இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
ஐ.சி.சி.ஆர் புலமைப்பரிசில் 2018–19 கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளது. நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 100 புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. இளமாணிப்பட்டப்படிப்பாக மருத்துவம் தவிர்ந்த பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், பொருளாதாரம், முகாமைத்துவம் மற் றும் கலை ஆகிய துறைகளில் வழங்கப்படவுள்ளது.
மௌலானா அஸாட் புலமைப்பரிசில் திட்டமாக 50 புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. முதுமாணிப்பட்டமாக பொறியியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வர்த் தகம், கலை ஆகிய துறைகளில் வழங்கப்படுகின்றன.
ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 25 புலமைப்பரிசில் இளமாணிப்பட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கல்விகற்க உயர்கல்வி அமைச்சின் துணையுடன் இந்திய அரசாங்கமே இலங்கை மாணவர்களை தெரிவு செய்யும்.
gov.lk எனும் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப்படிவம் தரவிறக்கப்பட முடி யும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கு 15.01.2018 இறுதி நாளாகும்.