ரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது


நாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது
Image result for sri lanka railway










இந்நிலையில், வேலைநிறுத்தம் குறித்து ஆராயவென அமர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள் இன்று முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் சமரச முயற்சி எட்டப்பட்ட நிலையில் குறித்த போராட்டத்தை கைவிடுவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வேயின் பதின்மூன்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒப்பந்த அடிப்படையில் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று பணிக்குத் திரும்பாதவிடத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்கள் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Unknown