பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பார்க்கவில்லை: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பார்க்கவில்லை: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பின் மு.க ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். ஒகி புயல் பாதிப்புகள் குறித்து ஆளுநரிடம் விளக்கமாக தெரிவித்தோம் என்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனைகளை எடுத்துரைத்தோம் என்றும் அவர் கூறியுள்ளார். போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோரியுள்ளோம் என்றும் பேரிடர் மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் மு.க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 


காணாமல் போன மீனவர்கள் கணக்கீட்டில் குளறுபடி உள்ளது என்றும் ஆட்சியரும் அமைச்சர்களும் வேறுபட்ட தகவல் தருவதால் குழப்பம் ஏற்படுகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பார்க்கவில்லை என்றும் புயல் வீசி பல நாள் கழித்து குமரி மாவட்டத்துக்கு முதல்வர் சென்றுள்ளார் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

About Unknown