ஒரு மனிதன் மட்டும் வாழும் அதிசய கிராமம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஒரு மனிதன் மட்டும் வாழும் அதிசய கிராமம்

 கிராமங்கள் இருந்து வேலை தேடி தற்போது பட்டணத்தை நோக்கி பலர் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வாழ்கிறாராம். இந்த அதிசய கிராமம் சீனாவில் உள்ளது.
சீனாவில் உள்ள ஜுயென்சாஷே என்ற கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வேலை தேடி வேறு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
ஆனால் அந்த கிராமத்தில் லுய் ஷெங்ஜியா என்ற ஒரே ஒரு இளைஞர் மட்டும் எங்கும் செல்லாமல் தனியாக வசித்து வருகிறார். இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை என்றும் அதனால் இந்த கிராமத்தை விட்டு வெளியேற மாட்டேன்’ என்றும் கூறிவருகிறார்.
இவரது ஒரே பொழுதுபோக்கு இவருடன் உள்ள ஒரு நாயும், ஐந்து ஆடுகளும்தான். இவர் தனக்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வாங்கி கொள்வாராம்.

About UK TAMIL NEWS