ரயிலில் செய்த அசிங்கம் - இளம் பெண்ணின் காலில் விழந்த நபர் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ரயிலில் செய்த அசிங்கம் - இளம் பெண்ணின் காலில் விழந்த நபர்

இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை புகைப்படம் எடுத்த நபருக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணித்த இளம் பெண் வழக்கறிஞரை, தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நபர் ஒருவர் திறந்த நீதிமன்றில் குறித்த வழக்கறிஞரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரியுள்ளார்.
குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 55 வயதுடைய திருமணம் செய்த நபருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக ஹட்சன் என்ற குறித்த சந்தேகநபருக்கு 1500 ரூபாய் தண்ட பணம் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், புகைப்படம் எடுத்த தொலைபேசியை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை சிறுவர்கள் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS