யாழில் மனிதம் செத்துவிட்டது என்பதற்கு அடுத்த சாட்சி!! வீதியில் நடந்த பதைபதைக்கும் காட்சிகள்.... - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

யாழில் மனிதம் செத்துவிட்டது என்பதற்கு அடுத்த சாட்சி!! வீதியில் நடந்த பதைபதைக்கும் காட்சிகள்....

யாழ் கொக்குவில் சந்திப் பகுதிக்கு அருகில் நடு வீதியில் வைத்து தனது உணவை சாப்பிட்டுள்ளார் மன நலம் குன்றிய வயோதிப மூதாட்டி ஒருவர்.
இவர் நடுத்தெருவில் வைத்து சாப்பிடுவதை அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்தவர்களும் வீதியால் சென்றவர்களும் வேடிக்கை பார்த்தார்களே தவிர அந்த மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல நீண்ட நேரமாக யாரும் முன்வரவில்லை என தெரிகின்றது.
பின்னர் இதனை அவதானித்த வீதியால் சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் "வடக்கு மாகாணசபைக்குள் விசர் கூடியதுகள் இருந்து கும்மாளம் போடுவதை அடுத்தநாள் பேப்பரில் பார்த்து மகிழ்வது போல் இந்த மூதாட்டியின் செயலையும் இவ்வாறு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்களே" என கவலையுடன் தெரிவித்துவிட்டு மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார் என தெரியவருகின்றது.
இதேவேளை, யாழ் நகரில் அண்மையில் பிரபல்யமான உணவு விடுதி ஒன்று வீதியில் இருந்த முதியவர்க்கு தண்ணீர் ஊற்றி கலைத்தத்து யாரும் அறிந்ததே

About UK TAMIL NEWS