திருமலையில் உயிருக்குப் போராடும் யானை.. - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

திருமலையில் உயிருக்குப் போராடும் யானை..

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிறிவிற்குட்பட்ட சூரியவௌ பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த யானையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு வனஜீவராசி பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களுடன் இணைத்து இராணுவத்தினரும் போராடி வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS