ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த உத்தரவை, இன்று பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் இயக்கம், தொடர்ந்தும் தடைப்பட்டியலில் நீடிக்கின்றது.
2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த அமைப்பு தொடர்பில் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளும் பதிவாகாத நிலையில், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய கறுப்பு பட்டியலில் 13 பயங்கரவாதிகள் மற்றும் 22 பயங்கரவாத அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
