நல்லூர் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர ஆகிய இருவருக்கும் புதிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மிகவிரைவில் குறித்த இருவரையும் விசாரணைகளுக்காக அழைக்கப்படலாம் என பொலிஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தீர்மானம் நாட்டின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட விசேட கூட்டத்திலேயே எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.
கடந்த துப்பாகிப் பிரயோக சம்பவம் தொடர்பில் குறிப்பிட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரண்பட்ட அறிவிப்புக்களினை வெளியிட்டிருந்தனர்.
சந்தேக நபர் கைதாகாத நிலையில் எந்தவித வலுவான விசாரணைகளும் நடத்தப்படாமல் நீதிபதி இளஞ்செழியனின் கூற்றை மறுதலிப்பதாக இருவரது அறிவுப்புக்களும் வெளியாகி பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
