சினேகனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓவியா! கதி கலங்கி போன பிக்பாஸ் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சினேகனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓவியா! கதி கலங்கி போன பிக்பாஸ்

பிக்பாஸ் குழுவின் தலைவர் சினேகனுடன் ஏற்கெனவே மோதலில் ஈடுபட்டிருந்த நடிகை ஓவியா, நேற்று விருது வழங்கும் விழாவில் மீண்டும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு 'சோம்பேறி' விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தனக்கு கொடுத்த வேலையை செய்யாமல் காலம் தாழ்த்தியதால் இந்த விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விருதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓவியா மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தான் ஒரு சோம்பேறி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓவியா கூறினார்.
மேலும், இந்த விழாவில் ஹைஜீனிக் என்ற சுத்தமான விருது நமீதாவுக்கும், கடின உழைப்புக்கான விருது காயத்ரி ரகுராமுக்கும், டிஸ்ஹானஸ்ட் என்ற நேர்மையற்றவர் விருது நடிகர் பரணிக்கும், ஜூலியானாவுக்கு 'சுத்தமில்லாதவர்' விருதும் வழங்கப்பட்டது.

About UK TAMIL NEWS