துன்னாலை இளைஞன் படுகொலை இன்று நடந்தது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

துன்னாலை இளைஞன் படுகொலை இன்று நடந்தது

யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை சந்கே நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 9 ஆம் திகதி 6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்ட நிலையில், மீறிச் சென்றபோது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்தார்.

About UK TAMIL NEWS