வாகனேரி பிரதேசத்தில் சிறுமி கடத்தல்: ஒருவர் கைது - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வாகனேரி பிரதேசத்தில் சிறுமி கடத்தல்: ஒருவர் கைது

மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் தனது முகத்தினை மூடியவாறு சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து கடத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் அலறல் சத்தத்தினைக் கேட்டு அயலவர்கள் அப்பகுதிகளில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் குறித்த சிறுமியை அருகில் உள்ள குளக்கட்டுப்பகுதில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About UK TAMIL NEWS