அப்பாவியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

அப்பாவியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!

திருடன் என்று நினைத்து, அப்பாவியை நபரை அடித்துக் கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் ப்ளேஸில் செயல்பட்டு வரும் உணவு விடுதியில் தீபக் பணிபுரிந்து வந்துள்ளார்.
அவர் தனது நண்பர்கள் இருவருடன், கடந்த 8ஆம் திகதி இரவு 10 மணியளவில் சென்றுள்ளார். அங்கு, ஆஸாத்பூர் மந்தியில் உள்ள வேறொரு உணவு விடுதிக்கு செல்லுமாறு விடுதி உரிமையாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து மூவரும் அங்கு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் ரயில் பாதையை ஒட்டியுள்ள குடிசைப் பகுதி வழியாக சென்ற போது, அங்கு வந்த பெண் ஒருவர் திருடன், திருடன் என்று கத்தியுள்ளார்.
இதையடுத்து தாங்கள் திருடர்கள் இல்லை என்று, மூவரும் அப்பெண்ணிடம் விளக்க முயன்றனர். ஆனால் அவர் நம்பாமல் தொடர்ந்து கத்தியதில், 4 பேர் ஓடி வந்தனர். அவர்கள் இரும்பு கம்பி மற்றும் கற்களால் மூவரையும் தாக்கியுள்ளனர்.
அப்போது ஒருவர் தப்பிச் செல்ல, மற்ற இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு பாபு ஜக்ஜீவன் ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் தீபக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து உயிர் தப்பிய நண்பர் சுரேஷ் போஹ்ரா(23), விளக்கமாகக் கூறியதில் மூவரும் திருடர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

About UK TAMIL NEWS