தகாத உறவில் ஈடுபட்ட பிக்குவுக்கு நடந்த கதி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தகாத உறவில் ஈடுபட்ட பிக்குவுக்கு நடந்த கதி

தகாத உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியான பிக்கு ஒருவருக்கு 3 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அதனை செலுத்தாவிடின் மேலும் இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 18 வயது இளைஞன் மற்றும் மேலும் ஒரு இளைஞனையும் பயன்படுத்தி, காவற்துறை அதிகாரியுடன் இணைந்து, தகாத உறவில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி, மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஆபாச படத்தை பார்த்து தகாத உறவில் ஈடுபட்டதாக இந்த 4 பேருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட காவற்துறை அதிகாரி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டு இளைஞர்களுக்கும் 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

About UK TAMIL NEWS