புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை விட்ட நீதிபதி இளஞ்செழியன் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை விட்ட நீதிபதி இளஞ்செழியன்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கையோடு சேர்ந்த தெளிவான தகவல்களை விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
அதாவது வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள்.
அவர்களும் நல்ல தூக்கம் நல்ல சாப்பாடு எந்த கஸ்ரமும் உணராதவர்களாய் வாழ்கின்றனர்...
இவர்களின் எதிர்காலம் உங்களால்தான் அழிக்கப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
வேலை தேடாமல் சோம்பேறிகளாக வாழ்வது உங்களுக்கு தெரியுமா?
வீதியில் ரவுடிதனம் பண்றது உங்களுக்கு தெரியுமா ??
சிறுவயதில் போதைக்கு அடிமையாகுவது உங்களுக்கு தெரியுமா?
இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் அனுப்பும் பணம்தான்..!
அவர்கள் என்ன செய்கின்றனர் என்று உங்களால் கண்காணிக்க முடியுமா???
நம் சமுதாயம் சீர்கெடாமல் இருக்க வேண்டுமானால் வளர்ந்துவரும் இளைஞர் யுவதிகள்தான் வழி நடத்த வேண்டியவர்கள்.
அவர்களே சமுகத்தை சீர்கெடுத்தால் எப்படி? நாமும் ஒரு காரணமாக இருக்க கூடாது..! என புலம்பெயர் தமிழர்களுக்கு உறைக்கும்படி கேட்டிருக்கிறார்.
உண்மைதான் யாழ்ப்பாணம் முதல்மாதிரியில்லை . அவர்சொன்னது உண்மைதான்!அளவுக்கு அதிகமாக பணம் அனுப்பகூடாது என ஏனைய மாவட்டத்திலுள்ள அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

About UK TAMIL NEWS