359 பேருடன் மயிரிழையில் தப்பிய விமானம்! அதிர்ச்சியில் பயணிகள் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

359 பேருடன் மயிரிழையில் தப்பிய விமானம்! அதிர்ச்சியில் பயணிகள்

பறவை ஒன்று மோதியதில் ஆட்டம் கண்ட நிலையில், கோலாலம்பூருக்கு செல்லவிருந்த ஏர் ஏசியா எக்ஸ் விமானம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்குத் திசை திருப்பப்பட்டுள்ளது.
359 பேர் கொண்ட இந்த ஜெட் விமானம், நேற்றுமுன்தினம் கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து உள்ளுர் நேரப்படி இரவு பத்து இருபதுக்குப் புறப்பட்டு, சிறிது நேரத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஒரு மணி நேரம் கழித்து பிரிஸ்பேன் விமானத்தில் விமானம் விரைவாகத் தரையிறக்கப்படுவதற்கு முன்னர், ஒரு இயந்திரத்திலிருந்து தீப்பொறிகள் தென்பட்டதாகவும், பாரிய சத்தங்கள் கேட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமான ஓடுபாதையில் பறவையின் உடல் எச்சங்கள் கிடைத்ததாக விமானச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

About UK TAMIL NEWS