21 வயதில் இளம் யுவதி செய்த மோசமான செயல் அம்பலம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

21 வயதில் இளம் யுவதி செய்த மோசமான செயல் அம்பலம்

பேஸ்புக் மற்றும் வட்ஸ்எப் மூலமாக அறிமுகமானவர்களிடம் வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறித்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பெயர் கிருஷ்ணா . வயது 21 . இவர் கேரளாவை சேர்ந்தவர் . தனியார் நிறுவனம் ஒன்றில் பேஷன் டிசைனராக தொழில் புரிகிறார்.
இந்த பெண் வேலை வாங்கி தருவதாக கூறி 83 பேருக்கு பட்டை நாமம் சாத்தி உள்ளார்.
பேஸ்புக் மற்றும் வட்ஸ்எப் மூலமாக அறிமுகமானவர்களிடம் வேலைவாய்ப்பு ஆசை காட்டி பணம் பறித்துள்ளார்.
ஒவ்வொருவரிடமும் 50 ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை (இந்திய ரூபா) வசூல் செய்துள்ளார்.
மொத்தமாக 45 இலட்சத்துக்கும் மேல் வசூல் வேட்டை செய்துள்ளார். எனினும் , பணம் கொடுத்த ஒருவருக்கும் குறித்த பெண் வேலை வாங்கி தரவில்லை.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

About UK TAMIL NEWS