123 நாட்கள் அம்மாவின் சடலத்திற்குள் உயிர்வாழ்ந்த இரட்டை குழந்தைகள்..! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

123 நாட்கள் அம்மாவின் சடலத்திற்குள் உயிர்வாழ்ந்த இரட்டை குழந்தைகள்..!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கர்பிணிப் பெண்ணின் பெயர் படிஹா! இவர் தன் கர்பக் காலத்தில் ஏற்பட்ட மூளைச் சாவினால், இவர் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்று அவர் கணவர் அச்சப்பட்டார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே அவர் மனைவி இறந்துவிட்டாள்.
அங்கு சென்றதும் மருத்துவர்கள் இவர் இறந்துவிட்டார் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று கூறினார்கள்.
சிறிது நேரம் கழித்து ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது குழந்தையின் இருதயங்களை செயல்பாட்டில் உள்ளதை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என்றும் கண்டறிந்தனர்.
அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று செயல்பட்டனர்.ஆனாலும் அவர்கள் அதற்கு எடுத்துக் கொண்ட காலம் 123 நாட்கள்.
இதைப் பற்றி அவர் கணவர் கூறுகையில் ,"மருத்துவமனைக்கு அவளைக் கொண்டு செல்லும் போது நான் திரும்பவும் வீட்டிற்கு வரமாட்டேன் அங்கேயே இருந்து விடுவேன் என்று குறிப்பிட்டிருந்தாள்". என்று அவர் மனைவி கூறினாராம்.
பின்பு இப்பொழுது சாதனையாக நீண்ட நாட்கள் கழித்து அந்த இரண்டு குழந்தைகளையும் வெளியே எடுத்தனர்.அவர்களின் பெயர்கள் ஆன்னா விக்டோரியா (1.4kg ) மற்றும் அசப் (1.3kg).

About UK TAMIL NEWS