கணவன் கண்முன்னே நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த காரியம்... தர்ம சங்கடத்தில் அபிஷேக் - - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கணவன் கண்முன்னே நடிகை ஐஸ்வர்யா ராய் செய்த காரியம்... தர்ம சங்கடத்தில் அபிஷேக் -

உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
அதன்பின்னர் குழந்தை பிறந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதனால் பச்சன் குடும்பத்தில் கலகம் பிறந்ததாக தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ரன்பீர் கபூருடன், ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படத்தில் நடிகர் ரன்வீர் கபூருடன் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் ஐஸ்வர்யாராய் நடித்ததால் அபிஷேக் கடுங்கோபம் அடைந்ததாக பாலிவுட் பட்சிகள் கூறிவந்தன.
இந்நிலையில் ஐஸ்வர்யாராயின் தந்தை இறந்தார். தந்தை இறந்த சோகத்திலிருந்த ஐஸ்வர்யா மீது அபிஷேக் மீண்டும் மாறாத அன்பு பாராட்டத் தொடங்கினார்.
தற்போது இருவருக்கும் மீண்டும் புகைச்சல் கிளம்பி இருக்கிறதாம். சச்சின் டெண்டுல்கர் நடித்த, ‘சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்’ பட நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய், அபிஷேக்பச்சன், அமிதாப்பசன் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது சச்சினுக்கு ஐஸ்வர்யாராய் கைகுலுக்கி வாழ்த்து சொன்னதுடன் திடீரென்று கட்டிப்பிடித்தும் வாழ்த்து தெரிவித்தார். இது அபிஷேக்பச்சனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதாம்.
இதையடுத்து சிரித்த முகத்துடன் காணப்பட்டவர் திடீரென்று உர்ரென்று ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. பாலிவுட்டில் இது பரபரப்பாக பேசப்படுகிறதாம்.

About UK TAMIL NEWS