கருணாவின் வருகையினால் வவுனியாவில் அசாதாரண நிலை! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கருணாவின் வருகையினால் வவுனியாவில் அசாதாரண நிலை!

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவிருந்தது.
எனினும், குறித்த பொது நோக்கு மண்டபம் கட்சி கூட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும், கலந்துரையாடல் குறித்து பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About UK TAMIL NEWS