கிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கிளிநொச்சி பகுதியில் மாடுடன் இரயில் மோதி விபத்து!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் முறுகண்டிப் பகுதியில் வைத்து மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது குறித்த மாடு உயிரிழந்துள்ளதுடன், புகையிரதத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளமையால் புகையிரதத்தை நகர்த்துவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் வைத்து, சீர் செய்ததன் பின்னர் குறித்த புகையிரதம் யாழ். நோக்கி பயணித்தது.
காலை 11.05 மணிக்கு கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய குறித்த கடுகதிப் புகையிரதம் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானதாக தெரிவித்தனர்.

About UK TAMIL NEWS