வடமாகாண சபையை ஒற்றுமையாக செயற்படுமாறு வலியுறுத்தி ஒட்டுசுட்டானில் போராட்டத்திற்கு அழைப்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

வடமாகாண சபையை ஒற்றுமையாக செயற்படுமாறு வலியுறுத்தி ஒட்டுசுட்டானில் போராட்டத்திற்கு அழைப்பு

வடமாகாண சபை உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை கலைந்து ஒற்றுமையாக செயற்படுமாறு வலியுறுத்தி ஒட்டுசுட்டான் பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை(21) மாலை மூன்று மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பேரணி ஒட்டுசுட்டான் நீர்பாசன சந்தியில் இருந்து ஆரம்பமாகி, ஒட்டுசுட்டான் சிவன் கோயில் சந்தியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் மகஜர்கள் அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதில் அனைவரும் கலந்து கொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS