சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ டப்பிங் பணிகள் தொடக்கம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ டப்பிங் பணிகள் தொடக்கம்

‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.
பூஜையுடன் தொடங்கிய டப்பிங்கில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு தனது காட்சிகளுக்குண்டான டப்பிங்கை பேசிக் கொடுத்துள்ளார். டப்பிங்கை கூடிய விரைவில் முடித்துவிட்டு அடுத்தக்கட்ட பணிகளை படக்குழுவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.

About UK TAMIL NEWS