லிற்றோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு? - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

லிற்றோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

லிற்றோ எரிவாயுவின் விலையை உயர்த்த அமைச்சரவையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலையை 219 ரூபாவினால் உயர்த்துவதற்கு அனுமதியளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
லிற்றோ எரிவாயு நிறுவனம் இலங்கையில், சமையல் வரிவாயு மொத்த தேவையில் 72 வீதத்தை நிரம்பல் செய்யும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
12.5 கிலோ கிராம் எடையுடைய லிற்றோ எரிவாயு சிலிண்டர் தற்போது 1346 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், 5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டர் 572 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்வதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் விலை உயர்த்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About UK TAMIL NEWS