வடமாகாணசபை முதலமைச்சர் எடுத்த முடிவில் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அதனை மறுத்து – அவரை பேசவிடாமல் அவமதித்து – சிங்கள அரசின் காலில் விழுந்த சிவிகே உட்பட்ட 16 உறுப்பினர்களையும் தங்களோடு எதிர்கட்சி உறுப்பினர்களையும் அழைத்துச் சென்றமை தமிழர்களின் உரிமைக்கான தேடலில் இன்னொரு துரோகம்.
தமிழ் மக்களால் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அவர் எடுத்த அமைச்சரவை மாற்ற முடிவிற்காக பொங்கியெழும் இவர்களின் நோக்கம் என்ன?
முன்னர் இவர்களில் 16 பேர் கையொப்பம் இட்டே அமைச்சர்களை மாற்றுங்கள் என முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தவர்கள். இப்போது விசாரணைக்கு பின்னர் மாற்றும் போது அதற்கு எதிராக பொங்கியெவதன் நோக்கம் என்ன?
இருந்த அமைச்சரவைக்கு ஒத்துழைப்பு இல்லை என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். எனவே மாற்றம் செய்வதும் ஒரு கோணத்தில் சரியான முடிவே.
அமைச்சுப்பதவிகளை தியாகம் செய்யுமாறே கோரினார். உயிரை தியாகம் செய்து போராடிய இனம் அமைச்சு பதவிகளுக்காக சோரம் போனதுதான் சோகம்.
எது எப்படியோ தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த ஒரு தலைவனையே மாற்றுங்கள் என சிங்களத்திடம் கெஞ்சுவதை யாரிடம் சொல்ல?
