நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் ; அர்த்தனா - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் ; அர்த்தனா

சமுத்திரகனியின் ‘தொண்டன்’ படத்தில் அவருடைய தங்கையாக நடித்தவர் அர்த்தனா. இது பற்றி கூறிய அவர்…
“முதல் படத்தில் தங்கையாக அறிமுகமாகி விட்டீர்களே… என்று எல்லோரும் வருத்தத்துடன் கேட்கிறார்கள். தங்கையாக நடிப்பது அவ்வளவு பெரிய தவறா? சமுத்திரகனி சார் இயக்கம், அவருடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் கதையே கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
‘தொண்டன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி சாருக்கு போன் செய்து ‘என் கதாபாத்திரம் பற்றி ஒருவரியில் சொல்லுங்கள் நான் தயாராகி வருகிறேன்’ என்றேன். அதற்கு அவர், ‘ என்தங்கை நல்ல மங்கை’ என்று மட்டும் தெரிவித்தார். துணிந்து நடித்தேன். உண்மையான வாழ்க்கையில் செய்ய முடியாததை அவரது தங்கை பாத்திரத்தின் மூலம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அடுத்து 2 படங்களில் கதாநாயகியாக நடிக்கிறேன். என்றாலும் நல்ல கதை, நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்” என்றார்.

About UK TAMIL NEWS