டிராக்டர் பெட்டியின் கீழ் நசியுண்டு குடும்பத் தலைவர் பரிதாபச் சாவு

மணல் ஏற்­றிய உழவு இயந்­திர பெட்­டியின் கீழ் நசி­யுண்டு குடும்­பத்­த­லை­வர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு – மாங்­கு­ளம், பனிச்­சங்­கு­ளம் பகு­தி­யில் நேற்­றுப் பிற்­ப­கல் 2 மணி­ய­ள­வில் இடம்­பெற்­றது.
சம்பவத்தில் கிளிநொச்சி, பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான அர்ச்சுனம் முரளிதரன் (வயது – 42) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
“மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரத்தின் பெட்டியின் சில்லு உடைந்துள்ளது. அதனைச் சீர்செய்வதற்காகப் பெட்டியை மேல் உயர்த்தப்பட்டது. அது ஓர் பக்கம் சரிந்து வீழ்ந்துள்ளது. அதற்குள் சிக்குண்டே குடும்பத்தலைவர் உயிரிழந்தார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.