ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் பலி! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் பலி!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட மற்றுமொரு இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார்.
சிரியாவில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் அஹமட் தாஜூடீன் என்ற இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார்.
சிரியாவின் ரக்கா நகரில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றிய இவர், துருக்கியின் ஊடாக சிரியாவிற்குள் பிரவேசித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கேகாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சார்பில் போராடி உயிரிழந்திருந்தார்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சிலர் மக்காவிற்கு செல்வதாகக் கூறி, சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

About UK TAMIL NEWS