என் மகளுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும்: மனு அளித்த நளினி - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

என் மகளுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும்: மனு அளித்த நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வரும் நளினி தேசிய பெண்கள் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளார்.
அதில், இந்தியாவிலேயே 25 ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் சிறைவாசி நான் தான். மற்ற மாநிலங்களில் 10 அல்லது 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக சாதாரண பெண்ணாக குடும்ப வாழ்க்கை வாழவில்லை. எனது மகள் லண்டனில் வசிக்கிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்.
எனவே, தேசிய பெண்கள் ஆணையம் இந்திய அரசியலமைப்பு சட்டம் 72-ஐ பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

About UK TAMIL NEWS