சுழிபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று சுழிபுரம் கிழக்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியினை சேர்ந்த உமாகர சர்மா வயது 36 என்பவரே சடல மாக மீட்கப்பட்டவராவார்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.