கையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

கையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.


இந்த தகட்டில் அகவீரன் என்று எழுதப்பட்டுள்ளது. அத்துடன், தகட்டில் ஐ:1680 எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தகடு விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கு
சொந்தமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

அத்துடன், குறித்த விடுதலைப் போராளி தனது பெயரை தனது தகட்டு இலக்கத்தின் பின்னே
பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால்-நந்திக்கடல் வெளிப்பிரதேசத்தில் 2009 ஆண்டு தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் இறுதி யுத்தம் நடைபெற்றது.2

குறித்த இறுதிப்போர் முடிவுக்கு வந்து இன்று எட்டு வருடங்கள் கடந்த நிலையில் ஒரு
போராளியின் அடையாளத் தகடு கையெழுத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS