பாகுபலி வாய்பைக் கெடுத்தவன் நீ..! கிளம்பு.! சங்கமித்ரா வெற்றி வரை முகத்தில் முழிக்காதே - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பாகுபலி வாய்பைக் கெடுத்தவன் நீ..! கிளம்பு.! சங்கமித்ரா வெற்றி வரை முகத்தில் முழிக்காதே

பாகுபலி 2’ என்ற ஒரே படத்தால் உலகப்புகழ் பெற்றார் நடிகை அனுஷ்கா, ஆனால் இந்த புகழெல்லாம் நயனுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டியது.
ராஜமெளலி கூப்பிட்ட சமயத்தில் காதல் மற்றும் கால்ஷீட் குழப்பத்தால் பாகுபலியில் நடிக்க மறுத்துவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம் காதலர் தான், அவர் தான் மூளையைக் குழப்பி விட்டார். இல்லையென்றால் இன்று உலகப் புகழ் கிடைத்திருக்கும், என்கிற கடுங்கோபத்தில் இருந்தவர் காதலரைக் கலட்டி விட்டதாக் கூட வதந்திகள் பரவியது.
இந்த நிலையில் மீண்டும் அதே மாதிரியான ஒரு வாய்ப்பு சங்கமித்ரா இளவரசி வடிவில் வந்துள்ளது. ஆம் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக தற்போது நயனுடன் பேசி வருகிறாராம் சுந்தர் சி.
சம்பளம் பிரச்சனை எவ்வளவு வேண்டுமானாலும் ஓகே, நாங்கள் கேட்கும் கால்ஷீட்டை மட்டும் மொத்தமாக கொடுக்க வேண்டும் என்ற ஒரே கண்டிஷன் தான் படக்குழுவினர் தரப்பில்.
சரி என்று கண்ணை மூடிக் கொண்டு கூறி விட்டாராம். காதல் கத்தரிகாய் எல்லாம் சங்க மித்ரா வந்த பின்தான் என்கிறார்கள்.
இதனால் ‘சங்கமித்ரா’வில் நடிக்க நயன் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்காக கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும்.
வாள்சண்டை, குதிரையேற்றம், மண்ணில் புரள வேண்டும் ஆகியவை நயன் முன் நிற்கும் சவால்.
ஆனால் கோடிகள் கொட்டும்போது மண்ணில் புரள கசக்கவா செய்யும் என்று கூறுகின்றனர் கோலிவுட்டினர்.

About UK TAMIL NEWS