விஜய் சேதுபதி, த்ரிஷா போல் முக சாயல் உள்ளவர்களைத் தேடுகிறார் இயக்குனர் பிரேம்குமார் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

விஜய் சேதுபதி, த்ரிஷா போல் முக சாயல் உள்ளவர்களைத் தேடுகிறார் இயக்குனர் பிரேம்குமார்

இளம் வயது தொடங்கி வாலிப வயது வரையான கதை அமைப்புக்கொண்ட படங்களுக்கு அதில் நடிக்கும் நட்சத்திரங்களின் முக சாயலுக்கு ஏற்ப ஜூனியர் நட்சத்திரங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘96’.
சிறுவயது நட்பு தொடங்கி வாலிபப் பருவ காதல் வரையிலான கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரின் முக சாயலுக்குப் பொருத்தமான சிறுவயது கதாப்பாத்திர தேர்வை நடத்தி வருகிறார் இயக்குனர் பிரேம்குமார்.
இதுவரை பலர் தேர்வுக்கு வந்தபோதும் இன்னும் பொருத்தமான முக அமைப்புள்ளவர்கள் கிடைக்காததால் தேடுதலைத் தொடர்கிறார்.
ரோமியோ ஜூலியட், கத்திசண்டை, வீரசிவாஜி போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கிறார்.

About UK TAMIL