பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க கைது!


பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாநகரசபையின் இரண்டு வருமான பரிசோதகர்கள் உள்ளிட்ட சிலரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மேயர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஜனக நிஷாந்த ரத்நாயக்கவிடம் பண்டாரவளை விசேட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.