ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார். - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

 ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.



 

இது தொடர்பாக 'X' தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், இந்த இக்கட்டான தருணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை எப்போதும் உறுதியாக நிற்பதுடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.