நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 ம்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் திட்டமிட்டப்படி ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகாது. திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜனநாயகன் திரைப்படத்தை தயாரித்த கேவிஎன் புராடக்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛எங்களின் ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கனத்த இதயத்துடன் இந்த அப்டேட்டை தருகிறோம். ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என காத்திருந்தோம். ஆனால் எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தற்போது திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். மேலும் இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதான காரியமாக இருக்கவில்லை. திரைப்படத்தின் ரிலீசுக்கான மாற்று தேதி விரைவிலேயே அறிவிக்கப்படும்.
அதுவரை நீங்கள் அமைதி காத்து அன்பை தொடரும்படி கேட்டு கொள்கிறேன். உங்களின் தளராத ஆதரவு தான் எங்களின் பெரிய பலம். அதுதான் எங்களின் ஜனநாயகன் படக்குழுவிற்கு எல்லாமுமாக இருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் திரைப்படத்தை ஜனவரி 9 ம் தேதி தியேட்டர்களில் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.
முன்னதாக, நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' ஜனவரி 9ம் தேதி தியேட்டரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. அதன்பிறகு டிரெய்லரும் வெளியாகி பேசும் பொருளானது. விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகினர்.
முன்னதாக, நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' ஜனவரி 9ம் தேதி தியேட்டரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடந்தது. அதன்பிறகு டிரெய்லரும் வெளியாகி பேசும் பொருளானது. விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகினர்.
ஆனால் தற்போது வரை அந்த படத்துக்கும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. மேலும் சென்சார் சான்று வழங்க கோரி படக்குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. படத்தில் சில அரசியல் கருத்துகள், மதம் மற்றும் ராணுவம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழு மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைக்காத நிலையில் திரைப்படம் ஜனவரி 9 ம் தேதிக்கு வெளியிடுவதற்கு பதில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

