நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வணிக ரீதியாகவும் இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், படத்தில் இடம்பெற்ற, ‘கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடா’ என்கிற வசனத்தை புரமோஷனுக்காக திரையரங்கம் ஒன்றில் ஜீவா பேசியது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், கரூர் பலியின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ‘படிச்சு படிச்சு சொன்னோம். கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடான்னு’ என வருத்தமாகக் கூறியிருந்தார். ஆனால், அது சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலாக மாறியது.
