லதொட்சுமிடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்! - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

லதொட்சுமிடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!




சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இலக்கியா, ஆனந்த ராகம் தொடர்கள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், லட்சுமி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ருதி மற்றும் எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் தொடர் லட்சுமி. மேலும், இந்தத் தொடரில் ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தத் தொடர், இன்று(ஜன. 19) முதல் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இலக்கியா தொடர் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், லட்சுமி தொடர் புதிய நேரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், இன்றுமுதல் பிற்பகல் 2.30 மணிக்கு இரு மலர்கள் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது.

About ஈழ தீபம்